அமைச்சர் கம்பன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அமைச்சர் கம்பன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே எதிர்க் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தை பாதிக்காது. இது வெறுமனே அரசியலை நோக்கமாக கொண்டது.
தற்போதைய அரசாங்கம் மக்கள் நலன்சார் விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்படுவதை மக்கள் அறிவார்கள். எரிப்பொருள் விலையேற்றம் குறித்து அரசாங்கம் குறிப்பாக பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்து சாதகமான முடிவு கிடைக்கும்.
அரசாங்கம் மக்களுக்கானது என்பதால் அரசாங்கத்திற்குள் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. தற்போதைய நிலையில் உலக நாடுகள் சில பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. ஆனால் எமது அரசாங்கம் வெற்றிகரமாக செயற்படுகின்றது. ஆகவே ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட கருத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல.” – என்றார்.
க.கிசாந்தன்