மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு, மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆகிய உறுதிமொழிகள் வரவு – செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம். எனினும், எதிர்க்கட்சிகள் ஆயிரம் ரூபா தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றன.
நல்லாட்சியின்போது ஏன் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கமுடியாமல்போனது? 50 ரூபாவைக்கூட பெற்றுகொடுக்கமுடியாத இவர்கள் ஆயிரம் ரூபா பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் மலையகத்தில் அபிவிருத்திகள் நடைபெற்றன.
சம்பள உயர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளனர். நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்.” என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம், மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆகிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை வரவேற்கின்றோம்.
வழங்கமுடியாமல். போனது மஹிந்த ஆட்சிகாலத்தில்தான் தோட்ட மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன. ஆயிரம் , வீடமைப்புதிட்டம் ஐந்த வருடங்களில் அபிவ வேலைகள் செய்வோம்.
பேச்சு நடத்தியுள்ளோம். தோட்டக்கம்பனிகள் – பெற்றுக்கொடுப்போம். மறந்துவிட்டனர். நான்கரை வருடங்களில் –










