2ஆம் இணைப்பு
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்
ஜனாதிபதி தேர்தல் சமரில் இருந்து தான் விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அவர் இன்று எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
………….
தம்மிக்க பெரேரா கடைசி நேரத்தில் மறுப்பு தெரிவித்துவிட்டார் என தகவல் வெளியிட்டுள்ளார் ராஜபக்ச குடும்ப உறுப்பினரான ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க.
தம்மிக்க பெரேராவுக்கு நாளை காலைவரை அவகாசம் உள்ளது எனவும், அவர் முடியாது எனக் கூறிவிட்டால் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச களமிறக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பான அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச வெளியிடுவார் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது என தெரியவருகின்றது.











