நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்தது ஏன்? எதிர்க்கட்சிகள் வெளியிடும் ‘பகீர்’ தகவல்!

அரசுக்குள்ளும், வெளியேயும் எழுந்துள்ள நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தியுள்ளாரென நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவே இவ்வாறு சுட்டிக்காட்டின.

” நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதற்கான தேவை தற்போது எழவில்லை. எனினும், ஏதோவொரு உள்நோக்கத்துடன் மாற்றுவழியை தெரிவுசெய்யவா ஜனாதிபதி இவ்வாறு செயற்பட்டுள்ளார் என்ற கேள்வி எழுகின்றது. சர்வாதிகார போக்கின் வெளிப்பாடே இது.

ஜனநாயகத்துக்கு எதிரான இந்த செயலை கண்டிக்கின்றோம். கோப்,கோபா உள்ளிட்ட குழுக்களின் தலைமைப்பதவிகளை மாற்றுதல் உள்ளிட்ட நோக்கங்களும் இதில் உள்ளன.”- என்றனர்.

Related Articles

Latest Articles