நாடாளுமன்றத்தின் பதவி காலம் நீடிக்கப்படுமா?

” நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் பேச்சுகூட நடத்தப்படவல்லை.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு ஆராய்ந்துவருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் மேற்கோள்காட்டி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார்.

” உத்தியோகப்பூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பூர்வமற்ற ரீதியிலோ இது பற்றி பேச்சு நடத்தப்படவில்லை. இந்நாட்டில் இரு தடவைகள்தான் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 1975 இல் ஈராண்டுகள் நீடிக்கப்பட்டன. 1977 இல் ஆட்சிக்கு வந்த அரசு, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நீடித்துக்கொண்டது.

இவ்விரு சந்தர்ப்பங்களிலுமே மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்ட கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமை நாட்டு மக்களுக்கு தெரியும். பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இவ்வாறான நகர்வுகள் ஜனநாயகத்துக்கு ஏற்புடைய விடயங்கள் அல்ல. எனவே, இந்த அரசிடம் அவ்வாறான திட்டம் இல்லை.” – என்றும் அமைச்சர் டளஸ் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles