மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் குறித்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.
