நாட்டின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவல ஏற்றுமதி வலையத்தில் இன்று திறக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிநவீன ஐரோப்பிய தொழிநுட்பத்தை கொண்ட குறித்த சீமெந்து ஆலையில், வருடாந்தம் 2 மில்லியன் மெற்றிக் டன் சீமெந்தை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.










