கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் ஆயிரத்து 972 பேர் பலியாகியுள்ளனர் – என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
முதலாவது அலையின் 13 மரணங்களும், 2ஆவது அலையில் 596 மரணங்களும் பதிவாகின.
அதேவேளை, கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,581 ஆக அதிகரித்துள்ளது.
