குரங்கு அம்மை நோயானது நாட்டில் அதிகளவில் பரவக்கூடிய அபாயம் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சில வலய நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்தார்.
நோய்த்தொற்று பரவல் தொடர்பில் உலக நாடுகளுடன் இணைந்து முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் குரங்கு அம்மை தொற்றுப் பரவும் அபாயம் ஏற்படுமாயின், தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.










