கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திலும் அனுரதாபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே சிறிதளவு மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.










