நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்படாதிருக்க ரணிலே ஜனாதிபதியாக வேண்டும்!

நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படாதிருக்க வேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்கும் முடிவே எடுக்கப்பட வேண்டும். அத்துடன், தேர்தலில் வெற்றிபெற்று அவர் ஜனாதிபதியாக வேண்டும். கடந்த 18 மாதங்களில் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டை மீட்டுவருகின்றார். அதற்கான பணி இன்னும் முடியடையவில்லை . எனவே, முன்னோக்க செல்ல இடமளிக்கப்பட வேண்டும். அதனை மாற்றினால் நாடு பின்நோக்கி செல்லக்கூடும்.

எனவே, ரணிலுக்கு மீண்டுமொருமுறை பொறுப்பு வழங்கப்பட வேண்டும். நாடு இருக்கும் இடத்தில் இருந்து சிறந்த நிலைக்கு செல்ல வேண்டுமெனில் ரணிலின் தலைமைத்துவம் அவசியம்.” – என்றார்.

Related Articles

Latest Articles