கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இராணுவத்தளபதி சற்று நேரத்துக்கு முன்னர் இந்த தகவலை வெளியிட்டார்.
கொரோனா தொற்று சந்தேகத்தில் நேற்று பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் 69 பேருக்கே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் வேலைசெய்த மேலும் 1,600 ஊழியர்களிடம் இன்றும் நாளையும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் இன்றுவரையில் 700 இற்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
