“எனது உடலில் சிங்கள இரத்தமே ஓடுகின்றது. நான் ஒருபோதும் இந்த நாட்டைவிட்டு செல்லமாட்டேன்.” – என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
“இத்துடன் எனது அரசியல் பயணத்தை நிறுத்திவிடலாம், என்னை வீழ்த்தி விடலாம் என நினைத்துவிட வேண்டாம். அடுத்த தேர்தலின்போது நிச்சயம் நாடாளுமன்றம் வருவேன். நான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பேன். எனது குரலை ஒடுக்க முடியாது.
இது எனது தாய் நாடு, சிங்கள இரத்தமே ஓடுகின்றது. நாட்டைவிட்டு செல்லமாட்டேன்.” எனவும் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.










