“ நான் நாட்டைவிட்டு தப்பியோடவில்லை, எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. தப்பியோட வேண்டிய அவசியமும் இல்லை.” – என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றதையடுத்து, பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த கமல் குணரத்ன நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையிலேயே அதனை மறுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் கமல் குணரத்ன. அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நான் தப்பியோடி இருந்தால் நாட்டில் இருந்து எப்படி உங்கள் முன்னிலையில் தற்போது உரையாற்ற முடியும்? இது நான் பிறந்த நாடு, வாழ்ந்த நாடு, இங்குதான் இறக்கவும் போகின்றேன்.எனவே, நாட்டைவிட்டு ஓடமாட்டேன். எவ்வித தவறும் இழைத்தது கிடைகாது. சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.
நாம் எமது இளைஞர் காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்தோம். காடுகளில் இருந்து நாட்டை காக்க போரிட்டோம்.” – என்றார்.










