நானுஓயா குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த எழுவரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார். இதனை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
