கண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் நாளை காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாக நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.










