நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை

கண்டி  நகரின் பல்வேறு பகுதிகளில்  நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான   ஆகிய பகுதிகளில் இவ்வாறு  நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில்    நாளை காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை நீர்விநியோகத்தடை   அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டவில்  அமைந்துள்ள  நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாக நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை  மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles