நிதி அமைச்சின் செயலாளரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது சாணம் வீச்சு!
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது சிலரால் முட்டை மற்றும் சாணம் வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அவ்வேளையிலேயே அங்கிருந்த சிலரால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த தரப்பினர்மீது முட்டை மற்றும் சாணம் வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு பொலிஸாரும் விரைந்திருந்தனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.










