“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகின்றது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி இருக்கின்றது, ஆனால் ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன முடிவடைந்த பின்னரே அதற்கான நடவடிக்கை எடுக்கப்ப ட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அம்பாந்தோட்டையில் நேற்று நடை பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடார். இதன்போது அவர் மேலும் தெரிவிக் கையில்,
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண் டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்ப டுகின்ற போதிலும் மக்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்த லுக்கும் பின்னரே அதனை இல்லாதொ ழிக்க வேண்டும். புதிய மக்கள் ஆணை யின் மூலமே அது இடம்பெற வேண் டும். இந்த வருட இறுதியில் நடைபெற வுள்ள தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்க மக்கள் ஆணையைப் பெற முடியாது என்பதனாலேயே குறித்த தேர் தலை ஆளுந்தரப்பு இரத்துச் செய்ய எத்தனிக்கின்றது.
இதனாலேயே அரசு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மையில் திருத்தங்களை கொண்டு வர முயற்சித்து வருகின்றது. உண்மையான அபிலாஷையுடன் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களைக் கொண்டு வர முயற்சித்தால் நாமும் அதற்கு ஆதரவு வழங்குவோம். எனவே, இங்கு அவ்வாறான உண்மை யான நோக்கம் இல்லை. தேர்தலை ஒத்தி வைக்கும் மறைமுகமான நோக்கம் உள்ளது. கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்ட தமது கைப்பாவைகளைப் பயன்படுத் திக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை அரச தரப்பினர் பரப்பி வருகின்றனர்.
ஜனாதி பதி முறைமையை இரத்துச் செய்யும் கொள்கையில் இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்ட திகதியில் உடனடியாக நடத்த வேண்டும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின் றது. தேர்தல்களின் பின்னர் கிடைக்கும் ஆணையின் ஊடாகவே இந்த நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறைமை திருத்தப்பட வேண்டும்.” – என்றார்.