நீதித்துறை மீதான அச்சுறுத்தலைக் கண்டித்து யாழில் புதனன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கூடிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெரோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் மேற்படித் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் மிகப் பெருமெடுப்பில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ். நகர் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தப் போராட்டம் காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

அதன்பின்னர் முல்லைத்தீவை முடக்கிப் போராட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்லவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), எம்.கே.சிவாஜிலிங்கம் (தமிழ்த் தேசியக் கட்சி) ஆகியோரும், சி.வி.கே.சிவஞானம் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), தியாகராஜா நிரோஷ் (ரெலோ), பா.கஜதீபன் (புளொட்), க.சர்வேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), எஸ்.கலையமுதன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles