நீர் தாங்கியில் விழுந்து குழந்தை பலி – இரத்தினபுரியில் சோகம்!

இரத்தினபுரியில் நீர் தாங்கியில் விழுந்து ஒன்றரை வருட குழந்தையொன்று பலியாகியுள்ளது.

இரத்தினபுரி மஹவலவத்த இலக்கம் 246இல் வசிக்கும் ஒன்றரை வயது உடைய ரிஸ்வின் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வீட்டின் அருகிலுள்ள நாலு அடி நீளம், அகலம் கொண்ட நீர்த்தாங்கியில் நீர் நிரம்பி இருந்ததாகவும் தாயார் துணிகளை கழுவி அதனை காயவைக்க சென்ற சமயம் குழந்தை நீர்த்தாங்கியில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை துடித்துக் கொண்டிருப்பதை கண்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles