நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (12) அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் விமானப்படையின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
