நுவரெலியா பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் பாதீட்டு நிறைவேற்றக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில் கூடியது.
இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 22 பேரும், எதிராக ஒருவரும் வாக்களித்தனர். உறுப்பினரொருவர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை. அந்தவகையில் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.
மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மஸ்ரீ மட்டுமே பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தார்.
கஜரூபன் திவ்யா நுவரெலியா
 
		 
                                    









