நுவரெலியா மாவட்ட செயலாளராக மத்திய மாகாண முன்னாள் பிரதான செயலாளரும், மத்தியமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான நந்தன கலப்பட இன்று (29) திங்கட்கிழமை சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நுவரெலியா மாவட்ட செயலாளராக கடமையாற்றிய எ. பீ. ஆர். புஸ்பகுமார விவசாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடந்த மார்ச் முதலாம் திகதி இடம்மாற்றம் பெற்று சென்றதையடுத்து நந்தன கலபட நுவரெலியா மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வலப்பனை பிரதேச பிரதி செயலாளராகவும் அதனை தொடர்ந்து அங்குராங்கெத்த, உடுநுவர, அக்குரனபோன்ற இடங்களில் பிரதேச செயலாளராகவும், அதனை தொடர்ந்து மத்திய மாகாண பிரதாண செயலாளராகவும் மத்திய மாகாண கல்வி செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இப் பதவியேற்பு வைபவத்தில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ. பீ. ரட்னாயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி சபையின் இணைத் தலைவருமான எஸ். பீ. திஸாநாயக்க உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
நுவரெலியா நிருபர் – எஸ். தியாகு










