நுவரெலியாவில் 12 சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்திய ‘வாழைப்பழச் சீப்பு’ அணி

எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளது.

இதற்கான கட்டுப்பணம் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தலைமையிலான குழுவினரால், நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (12.01.2023) செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன,

” நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கும் எமது கட்சி வாழைப்பழச்சீப்பு சின்னத்தில் போட்டியிடும். எமது கட்சியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இது மக்களுக்கான கட்சி. அதனால்தான் அனைத்து இன மக்களும் எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றனர்.

மக்கள் மாற்றத்தைக்கோருகின்றனர். எனவே, ஊழல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை மக்கள் விரட்ட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

அதேவேளை, தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர். நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்மூலம் தேர்தலை பிற்போடலாமேதவிர, வேறு வழிகளில் அதனை செய்ய முடியாது. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles