நுவரெலியாவில் 5ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!

நுவரெலியாவில் பிரசித்திபெற்ற ஹோட்டலொன்றின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இன்று அதிகாலை 1.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

47 வயதுடைய பிரியந்த எட்டியரராச்சி என்ற இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

-டி.சந்ரு , செ.திவாகரன்-

Related Articles

Latest Articles