நுவரெலியாவில் தேர்தல் ஆணையரின் விடுதி உடைக்கப்பட்டு கொள்ளை!

நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை , பணம் , இலத்திரனியல் சாதனங்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபைக்கு அருகில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனியார் விடுதியொன்றிலேயே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் விடுதியில் வசிப்பவர்கள் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறையின்போது, தமது சொந்த ஊருக்கு சென்றிருந்த வேளை குறித்த விடுதியை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் , பணம் மற்றும் மடிக்கணினி , தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பல இலத்திரனியல் சாதனங்களை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சொந்த ஊருக்கு சென்று மீண்டும் இன்று (17) திரும்பிய போதே விடுதி உடைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆராய்ந்த போதே திருட்டுச் சம்பவம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்யின் உதவியுடன் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles