நெனோ நைட்ரிஜன் திரவ உரத்துடன் நாட்டை வந்தடைந்த இரு இந்திய விமானங்கள்

இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெனோ நைட்ரிஜன் திரவ உரத் தொகையுடன் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விசேட சரக்கு விமானங்கள் இரண்டினூடாக இன்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
அதிகாலை 12.05 மணியளவில் வருகை தந்த விமானத்தினூடாக 72 ஆயிரத்து 576 லீற்றர் நெனோ நைட்ரிஜன் திரவ உரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
3.00 மணியளவில் வருகை தந்த இரண்டாவது விமானத்தினூடாக 72 ஆயிரத்து 576 லீற்றர் நெனோ நைட்ரிஜன் திரவ உரமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த உரத் தொகை கொழும்பிலுள்ள கமத்தொழில் அமைச்சின் மத்திய களஞ்சியத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles