நோர்வூட் பிரதேச சபையினூடாக பல்நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒரு வட்டாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு ஐந்து மின்விளக்குகள் என்ற வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்ந்து மக்களின் நலன்கருதி, 2021ம் வருட வரவு செலவு திட்டத்தில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட 105 தோட்டப்பிரிவுகளுக்கும் மேலும் ஐந்து மின்விளக்குகள் வீதம் 525 மின்விளக்குகள் பொருத்தப்படும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதுடன், நோர்வூட் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில், அதன் தலைவர் கே.கே. ரவி அவர்களின் மேற்பார்வையில், முதற்கட்டமாக சலங்கந்த பிரதேசத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.