பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார் கனடா வெளிவிவகார அமைச்சர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் , கனடாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பகவத் கீதை மீது கை வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

கனடா கூட்டாட்சி தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.

இதனையடுத்து புதிய அமைச்சரவையை கனடா பிரதமர் மார்க் கார்னி நியமித்தார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்துக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாயாருக்கு பிறந்தவர்தான் அனிதா ஆனந்த். அவர் கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.
2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2021இல் கனடா பாதுகாப்புத்துறை பதவி வகித்தார். அப்போது ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

அனிதா ஆனந்த் குயீன்ஸ் பல்கலையில், இளநிலை அரசியல் கல்வி, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நீதித்துறை சார்ந்த படிப்பு, டல்ஹவுசி பல்கலையில் இளநிலை சட்டப்படிப்பு, டொரன்டோ பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். இவர் 2019ல் அரசியலில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles