சீரற்ற காலநிலையினையடுத்து, பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய நிலை இருந்து வருகின்றதாக தேசிய கட்டிட ஆய்வகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையமும் அறிவித்துள்ளன.
அத்துடன் அவ் அறிவிப்பில், மண் சரிவு ஏற்படும் மலைப்பகுதிகள் மற்றும் மலை அடிவாரங்கள், தாழ்நிலங்கள் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள், உடனடியாக அப்பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் குடியமருமாறும், ஏனையவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பசறை, லுணுகலை, மடுல்சீமை, நமுனுகலை ஆகிய இடங்களில் ஆங்காங்கே மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. பசறைப் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் பாதிக்கப்பட்டுமுள்ளனர்.
எம். செல்வராஜா. பதுளை










