பசறை கிக்கிரிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் அலங்காரப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இவ்விழா தொடர்ந்து 13 நாட்களுக்கு பூஜை, விசேட அபிஷேகங்கள் மற்றும் அலங்காரப் பூஜைகளுடன் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பசறை நகருக்கான சுவாமித் தேர்பவனி எதிர்வரும் ஜூலை 28-ஆம் திகதியும் (28.07.2026), பக்தர்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பக்தியுடனான தீமிதிப்புத் திருவிழா ஜூலை 29-ஆம் திகதியும் (29.07.2026) நடைபெறவுள்ளன.
தொடர்ந்து, ஜூலை 30-ஆம் திகதி (30.07.2026) புனித தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல் அலங்காரப் பெருவிழா இனிதே நிறைவடையும்.










