பசறை – ஹிங்குருகடுவ பகுதியில் (19 வயது) யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி 54 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் அறிக்கையின் அடிப்படையிலே குறித்த தொற்றாளர் இன்று உறுதிப்படுத்தப்பட்டார் என பசறை பொதுசுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.
இதன்படி பசறை பிரதேசத்தில் இதுவரைக்காலப்பகுதியில்
25 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு இவர்களில் 20 பேர் குணமடைந்து தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையங்களிலிருந்து வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நடராஜா
மலர்வேந்தன்
