‘பசறை பகுதியில் மேலும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று’

பசறை பிரதேசத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் வீ.ராஜதுரை தெரிவித்தார்.

இதன்படி பசறை நகர பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட இரண்டு மாணவர்களோடு தொடர்புகளை பேணியவர்க்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் அடிப்படையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்களில் பாடசாலை மாணவர்கள் ஆறுபேருக்கும் பெண் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் அடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது,

இன்று உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களை தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி இதுவரை 16 மாணவர்கள் பசறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

நடராஜா மலர்வேந்தன்/ ராமு தனராஜா

Related Articles

Latest Articles