பசறையில் இதுவரை 58 பேருக்கு கொரோனா – 38 பேர் குணமடைவு

பசறையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, பசறையில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இன்று இனம்காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும்,  காகொல்லை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு இன்று மாலை அனுப்பப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன் பசறையின் 43 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப்பரிசோதனை அறிக்கை, இன்று கிடைக்கப்பெற்றபோதே, இருவருக்கு கோவிட்19 தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

பசறை – ‘கோவில்கடை’ப் பகுதியில் கோவிட் 19 தொற்று உறுதியான 40 வயது நிரம்பியநபர், ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்ட கோவிட் 19 தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தவராவார்.

அடுத்து, பசறைப்பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டலோவர் பிரிவைச்சேர்ந்த 23வயது நிரம்பிய நபருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கொழும்பிலிருந்து பசறைவந்து, தனிமைப்படுத்தப்பட்ட சிலருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவராவார்.

இவ்விருவரும், ககாகொல்லை கோவிட்19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பசறையில் கோவிட்19 தொற்று உறுதியாகியிருந்து சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட 58பேரில், 38 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

பசறையில் கோவிட்19 தொற்று உறுதியான இருவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனம்கண்டு, அவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles