பசறையிலிருந்து, பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு உயர்தர வகுப்பு மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ்ஸொன்றும், படல்கும்பரயில் இருந்து மீரியபெத்த நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியொன்றும் , பசறை 13 ஆம் கட்டை பாடசாலைக்கு அருகில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜா










