பட்ஜட் விவாதம் 10 இல் ஆரம்பம் – டிசம்பர் 8 வாக்கெடுப்பு!

2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நவம்பர் (09) ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளதுடன் நவம்பர் (10) முதல் டிசம்பர் (08) வரை வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடத்தப்படும்.

டிசம்பர் 8 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (ஒதுக்கீட்டுச்சட்டமூலம்) முதலாம் வாசிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles