பட்டலந்த வதை முகாம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.
சபைமுதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேற்படி அறிக்கையை முன்வைத்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டலந்த அறிக்கை இன்று சூரிய வெளிச்சத்தைக் கண்டது எனக் கூறி படலந்த ஆணைக்குழு அறிக்கையை சமர்பித்து சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றினார்.
இந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும், ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பாக மேலும் முடிவுகளை எடுக்க ஜனாதிபதி விசேட குழுவை நியமிக்கவுள்ளார் எனவும், அறிக்கை தொடர்பில் 2 நாள் விவாதம் நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.