பதவி விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை என அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும்,சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாலும் அஜித் கப்ராலை மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே ஜனாதிபதி தன்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளவில்லை என அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.அந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கப்ரால் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக தான் தொடர்ந்து பதவிவகிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles