பதுளை மாவட்டத்தில் நேற்று 25 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எல்ல சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேருக்கும், பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை மற்றும் வெலிமடை ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர்வீதம் வைரஸ் பரவியுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேருக்கும், ராகலை பிரிவில் ஐவருக்கும், ஏனைய பகுதிகளில் தலா ஒருவர்வீதம் வைரஸ் பரவியுள்ளது.
அதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் 66 பேருக்கும், மொனறாகலை மாவட்டத்தில் 86 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
