பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

பத்தாயிரத்து எழுநூற்று இருபது மில்லிகிராம் ஐஸ் (10720) போதைப் பொருளுடன் இருவர் பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

ஒருவர், 19 வயதுடைய பதுளை இங்கமருவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 5400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் பதுளை வீரியபுர பகுதியில் வசிக்கும் 19 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 5320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இங்கமருவ மற்றும் வீரியபுர பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில், பதுளை தலைமைக் பொலிஸ் நிலைய பதில் பிரதான பொலிஸ் பரிசோதகர் சானக சிரஞ்சிவ விஜேரத்ன, உபோப திஸாநாயக்க போஸா சுஜிவ (46592), போசா திஸாநாயக்க (74416), பொகோ சமிர (74503), போகோ விரசிங்க (85575) ), போகோ சம்பத் (79249) மற்றும் பொகோ திலகரத்ன (12560) ஆகியோர் சந்தேக நபர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை விசாரணையின் பின்னர்
பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தனராஜா டிமேஷன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles