பதுளையில் காடுகளுக்கு தீ வைக்கும் நாசகார செயல்கள் அதிகரிப்பு!

(பசறை நிருபர்)

பதுளை மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையை சாதகமாக் கொண்டு விஷமிகள் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாட்டை தடுப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் பதுளையில் உள்ள தனியார் விருந்தகமொன்றில் நடைபெற்ற போது கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன தெனிபிட்டிய, மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், வன பாதுகாப்பு, வனவிலங்கு பராமரிப்பு திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள முப்படைகளின் உயரதிகாரிகள்,
மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட முக்கிய திணைக்களங்களின் அதிகாரிகளும் கூடத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்;

இதுவரையான காலப் பகுதியில் 60 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள காடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிலவேளை இத்தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம். காடுகளுக்கு தீ பரவும் போது அதைத் அணைப்பதற்கு பொதுமக்கள் வழங்கும் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. அவர்கள் தீயினால் பாதிக்கப்படும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் அதிக கவனம் செலுத்துவதிலும், சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலை
தளங்களில் பதிவேற்றுவதிலுமே ஆர்வம் காட்டுகின்றனர் இது சமூகம் என்ற வகையில் நாம்வெட்கப்பட வேண்டிய விடயம் இன்னும் இரு மாதங்களுக்கு வறட்சியான காலநிலையை மாவட்டத்தில் நிலவும் ஆகையால் இந் நாசகார செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம் , என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெனிபிட்டிய, கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் பயணிகளை கவரும் மூன்று இடங்களில் நாசகார கும்பலால் ஒரே சமயத்தில் காடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக எல்ல நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள், நைன்ஆச் எனப்படும் 9வளைவுப் பகுதி, பொலிஸ் நிலையப் பகுதி என்பவற்றிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதுடன் ரயில் கடவைகளுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.

இறுதியில் விமானப்படையினரின் ஹெலிகாப்டர் மூலம் தீ பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்றார்.

இதனை தடுக்க பிரதேச செயலக மட்டத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக சிரமதானப் பணிகளை முன்னெடுக்கவும், புகையிரத கடவைகளின் இரு மருங்கையும் துப்புரவு செய்யவும், வணக்கத்தலங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி காட்டுத் தீ தொடர்பாக மக்களை தெளிவுப்படுத்தவும்,

பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் அனர்த்த பிரதேச மக்களின் வீடுகளுக்கு சென்று தெளிபடுத்தவும், சிவில் பாதுகாப்பு குழுக்களை பயிற்சியுடன் தயார்படுத்தவும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக தகவல் தொடர்பு அலகினை ஏற்படுத்தவும், பயர் பெல்ட், பயர் பெல்களை அமைக்கவும், அனர்த்த பிரதேசங்களை முன்கூட்டி அடையாளம் கண்டு பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் , மாவட்டத்தில் உள்ள தோட்ட முகாமையாளர்களுடன் கலந்துரையாடி தோட்டங்களை பாதுக்கவும், காடுகளுக்குள் உள்ள நடைபாதைகளை அடையாளப்படுத்தவும், சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவி பெறவும் கலந்துரையாடலில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles