பதுளை அம்பகாவத்தை பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 11 பேரை, பதுளைப் பொலிஸார் நேற்றிரவு (27) கைது செய்துள்ளனர். அத்துடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகணரங்களையும், கற்பாறைகளை வெடி வைக்கப் பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் பலவற்றையும் கைப்பற்றினர்.
மீட்கப்பட்ட பொருட்களில் டெட்னேட்டர் 02, வெடி நூல் இரண்டு ரோல்கள், அமேனியம் சல்பேட் வெடி மருந்துகள், குழிகளிலிருந்து கற்பாறைகளை வெளியில் எடுக்க பயன்படுத்தப்படும் “ஜெக்” என்ற பாரந்தூக்கிகள் இரண்டு, கேபல்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணத் தொகுதிகள் ஆகியனவும் அடங்கியுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபள்யு.எம்.சிரிவர்தன தெரிவித்தார்.
எம். செல்வராஜா – பதுளை நிருபர்