நுவரெலியா நகரில் இன்று முற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நுவரெலியா, பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்பவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
நுவரெலியா நகரில் நடை பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பழ வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலைத்துக்குசென்று சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்
நானுஓயா நிருபர்










