” பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டம் முன்வைக்கப்படும்.” – என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.










