பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கேகாலையில் கையெழுத்து வேட்டை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று கேகாலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், சர்வமதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துத் திரட்டும் ஊர்தி வழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நாளை காலிமுகத்திடல் பகுதியில் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles