பலாங்கொடை நகரில் பல்வேறு இடங்களில் நடைபாதை வியாபாரம் இடம்பெற்று வந்தன. பலாங்கொடை பிரதான பஸ் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மக்கள் நடந்து செல்லும் இடங்களில் பொதுமக்கள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலைமை காரணமாக நகரிற்கு வரும் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாகவும் இந்த வியாபாரம் செய்யும் இடங்களில் தவறான காரியங்களிலும் ஈடுபடுவதாக நகர சபை தலைவருக்கு புகார் கிடைத்துள்ளது.
நடைபாதையில் பல்வேறுபட்ட பொருட்களை விற்பனை செய்து வந்த பொதுமக்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு மாற்று வழியில் வியாபாரம் செய்ய உரிய நடவடிக்கைகளை பலாங்கொடை நகர சபை மேற்கொள்ளதாகவும் அறியப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
நெல் சந்தைப்படுத்தல் சபை 2 நாட்களில் 500 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு
