பலாங்கொடை மாரத்தென்ன இலக்கம் 1,2, DG பகுதியில் வசிக்கும் பெருந்தோட்ட மக்கள் தாம் பயணிக்கும் பாதையை சீர் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பம்பகொல்ல பிரதேசத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆறு மாதங்களாக பலாங்கொடை மாரதென்ன இலக்கம் 1, 2, மற்றும் னுபு பிரதேசங்களுக்கு செல்லும் பாதை முற்றாக தாழிறங்கி உள்ளதால் குறித்த வீதியின் ஊடகபிரயாணம் செய்வதில் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், பிரதேச மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அத்தோடு பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. காவற்துறையினர், சப்ரகமுவ ஆளுநர் நவின் திசாநாயக்கவிடம் குறித்த பிரச்சினையை எடுத்து கூறியபோது, குறித்த மக்களின் வீதி பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாக கூறினார்.
எம்.எப்.எம். அலி
