திவுலப்பிட்டியவில் 31 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் தனிமைப்படுத்தலில்

கொரோனா தொற்று ஏற்பட்ட ஆடைத் தொழிற்சாலை பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த 16 மகள் கல்வி பயிலும் வகுப்பு மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மாணவிகளின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மகள் திவுலப்பிட்டியவில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விபயில்கின்றமை குறப்பிடத்தக்கது. அத்துடன், தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி, கடந்த மாதம் முழுவதும் பாடசாலைக்கு இடைவிடாது வருகை தந்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த மாணவியின் சக வகுப்பு மாணவிகளையும், அவர்களின் குடும்பத்தாரையும், ஆசிரியர் சிலரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு ஆடைத் தொழிற்சாலையிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தற்போது வரை நடத்தப்பட்டுள்ள விசாரணைகளுக்கமைய சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதற்கான மூலம் இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles