நாடு முழுவதும் உள்ள 6ஆம் ஆண்டுக்கு மேல் கல்வி பயிலும் 1.2 மில்லியன் மாணவிகள் மாதத்தில் இரண்டு நாட்கள் பாடசாலையைத் தவிர்த்துக் கொள்வதாக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மாதவிடாய் நாட்களிலேயே இந்த மாணவிகள் பாடசாலையைத் தவிர்த்துக் கொள்வதாக மேலும் தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த மாணவிகளின் கல்விப் பணிகளில் இடையூறு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நகர மற்றும் கிராமப் புறங்களில் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவிகளில் 65 வீதமானவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் செனிடை நெப்கின் எனப்படும் மாதவிடாய் துணிகளை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இணைந்து இதுகுறித்து நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவுபடுத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக உரிய வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.